ரூ.80 ஆயிரம் கோடி - ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.





பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் கொண்டுவரப்பட்டது.  





இந்நிலையில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது


Popular posts
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image